விருதுநகரில் கொரோனோ தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில், இதுவரை 1.40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வமாக உள்ளனர். ஆனால் மருத்துவமனைகளில் தடுப்பூசி இல்லை என திருப்பி அனுப்புவதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கடந்த வாரம் வரை தட்டுப்பாடின்றி கொரோனோ தடுப்பூசி போடப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமையுடன் தடுப்பூசி இருப்பு தீர்ந்துவிட்டதாகவும். 25 ஆயிரம் தடுப்பூசி டோஸ்களை விருதுநகர் மாவட்டத்துக்கு வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்