விருதுநகர் மாவட்டத்தில் வட்டார சுகாதார கட்டிட பணிக்கு அமைச்சர் பூமிபூஜை
விருதுநகர் மாவட்டத்தில் வட்டார சுகாதார கட்டிட பணிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் பூமிபூஜை போடப்பட்டது.;
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இன்று(17.03.2022)பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலமாக கட்டிடங்கள் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது. 15-ஆவது நிதி ஆணையம் 2021- 22 சுகாதார மானிய திட்டத்தில், ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் வட்டார சுகாதார வளாக கட்டட பணிகளை, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.