அருப்புக்கோட்டை சாலை ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகங்களில் வருமானவரி சோதனை

அருப்புக்கோட்டை, சாலை ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்;

Update: 2022-07-06 14:30 GMT

அருப்புக்கோட்டை, சாலை ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தப்பட்டது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செய்யாத்துரை. சாலை பணிகள் ஒப்பந்ததாரரான செய்யாத்துரை கிரசர், கல்குவாரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை எஸ்.பி.கே. என்ற பெயரில் நடத்தி வருகிறார். இன்று செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் 20 பேர் கொண்ட குழுவினர், 5 கார்களில் வந்து செய்யாத்துரைக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் இவரது வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News