விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின விழா

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கேக் வெட்டி மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது;

Update: 2021-03-08 05:15 GMT

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை முன்னிலையில் அலுவலக பெண் ஊழியர்கள் அனைவரும் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினார்கள் அப்பொழுது ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த மகளிர் தின விழாவில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் மாவட்ட எஸ்பி இராதாகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் குந்தவை தேவி, மாவட்ட திட்ட இயக்குனர் காஞ்சனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

Tags:    

Similar News