விண்ணப்பித்த மறுநாள் இணைப்பு: மின்துறை அமைச்சர்

மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த மறுநாளே மின் இணைப்பு அளிக்கப்படும் என்று விழுப்புரத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்

Update: 2021-07-03 13:15 GMT

விழுப்புரத்தில் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, கே.எஸ்.மஸ்தான், செந்தில்பாலாஜி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் மோகன், எஸ்.பி ஸ்ரீ நாதா, நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்து பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆட்சியில் 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் மின் இணைப்பு கேட்டு பதிவு செய்து காத்திருந்தனர். இந்த நிலையில் அந்த அரசு மின் மிகை மாநிலம் என மக்களிடையே பிரச்சாரம் செய்தது, இவ்வளவு பேர் மின் இணைப்பு கேட்டு காத்திருக்கையில் எப்படி மின்மிகை மாநிலமாக இருக்க முடியும்?.

9 மாதங்கள் பராமரிப்பு பணியே நடைபெறவில்லை.  தற்போது  மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த மறுநாளே மின் இணைப்பு அளிக்கப்படும். மின் தளவாட பொருட்கள் ஏற்றிவருவதற்கு வாடகை இன்றி மின் இணைப்பு வழங்கும் மாநிலமாக மாறும். மின் நுகர்வோர் மிகவும் முக்கியமானவர்கள், அவர்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்,

Tags:    

Similar News