உள்ளாட்சி தேர்தலில் திமுக. கூட்டணி அமோக வெற்றி பெறும்:அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் நகராட்சியை பொருத்தவரை 42 வார்டுகளும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறுவார்கள் என அமைச்சர் பொன்முடி நம்பிக்கை தெரிவித்தார்;

Update: 2022-02-19 11:13 GMT

கோப்பு படம் 

விழுப்புரம் நகராட்சி தேர்தலையொட்டி விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி. மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி ,மகன் டாக்டர்பொன்.கவுதம சிகாமணி எம்.பி ஆகியோருடன் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

விழுப்புரம் நகராட்சியை பொருத்தவரை 42 வார்டுகளும் திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் அமோக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இன்று காலை முதல் வாக்காளர்கள் அச்சமின்றி  வாக்களிக்க வருவதை  பார்த்ததால் மக்கள் எந்தளவுக்கு ஆர்வமாக உள்ளனர் என தெரிகிறது என கூறினார். 

Tags:    

Similar News