தடுப்பூசி செலுத்துவதில் விழுப்புரம் மாவட்டம் தொடர்ந்து முதலிடம்

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தொடர்ந்து முதலிடத்தை விழுப்புரம் மாவட்டம் தக்க வைத்துக்கொண்டது.;

Update: 2022-02-12 14:15 GMT

மாதிரி படம்

தமிழகத்தில் கொரோனா   தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் வாரம்தோறும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது,

இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் 946 இடங்களில் நடைபெற்ற 22-வது தடுப்பூசி முகாம்களில் 70 ஆயிரத்தி, 10 பேர் கலந்து கொண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர், அதனால் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவதில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தை தக்க வைத்து வருகிறது,

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேகமாக நூற்றுக்கு மேல் தினந்தோறும் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு தற்போது வேகமாக குறைந்து 50 க்கும் கீழே உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வரும் மாவட்ட கலெக்டர் மோகனுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags:    

Similar News