விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் காய்கறிகள் சப்ளை : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை தளர்வில்லா ஊரடங்கு அமலாக உள்ள நிலையில் மக்களுக்கு தேவையான காய்கறிகள் சப்ளை செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு;
கொரோனா நோய் பரவலை தடுக்கும் பொருட்டு நாளை முதல் தளர்வுகளில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகம் செய்திட மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வீட்டிலிருந்து வெளியே வராமல் கொரானாவை ஒழிக்க ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.