கொரானா கட்டுப்பாடுகளை தளர்த்த நாடக கலைஞர்கள் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் கொரானா கட்டுப்பாடுகளை தளர்த்த நாடக கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட தவத்திரு தூ. த. சங்கரதாஸ் சுவாமிகள் மேடை நாடகக் கலைஞா்கள் நலச் சங்கத்தினா் சிவன், கிருஷ்ணா் உள்ளிட்ட கடவுளா்களின் வேடம் அணிந்து, பாடல் பாடியபடி வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனா்.
அதில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் நாட்டுப்புறக் கலைஞா்கள், நாடகக் கலைஞா்களின் தொழில் நலிவடைந்தது. அதன்பிறகு, ஓராண்டு கழித்து தற்போதுதான் வாய்ப்புகள் கிடைத்து, தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 10 ஆம் தேதி முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொழிலை நம்பியுள்ள கலைஞா்கள், அவா்களின் குடும்பத்தினா் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவாக கட்டுப்பாடுகளை தளா்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.