அனுமதியின்றி போராட்டங்கள்: விழுப்புரம் எஸ்பி எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதி இன்றி போராட்டங்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ் பி ஸ்ரீநாதா எச்சரித்துள்ளார்
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரேனும், காவல்துறை அனுமதியின்றி சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் நடத்துவதாக கூறினால் அவர்களை நம்பி போராட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள்.
அவ்வாறு கலந்து கொள்பவர்கள் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக விழுப்புரம் மாவட்ட காவல்துறை செயல்படும். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி இறப்பு சம்பந்தமாக பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்களின் சமூக வலைதள கணக்குகள் கண்காணிக்கப்பட்டு பொய்யான தகவல் பரப்புபவர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்