ஜே.ஆர்.சி கலை குழுவின் தேர்தல் விழிப்புணர்வு பாடல்கள் வெளியீடு

JRC Song in Tamil-விழுப்புரம் மாவட்டம் ஜே.ஆர்.சி. கலைக்குழுவினரால் தயாரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு பாடல்கள் வெளியிடப்பட்டது.;

Update: 2021-04-03 18:00 GMT

JRC Song in Tamil-விழுப்புரம் மாவட்டத்தில் ஜே.ஆர்.சி மாவட்ட கன்வீனர் மா.பாபு செல்லதுரையை ஒருங்கிணைப்பாளராக கொண்ட ஜே.ஆர்.சியின் நிர்வாகிகள். தேர்தல் விழிப்புணர்வு பாடல்களை எழுதினர்.

இந்த பாடல்களை ஜி.சின்னப்பராஜ், ஏ.எட்வின் ஆகியோர் தலைமையில் ஆசிரியர்கள் அருள்தாஸ், அந்தோனி கிருஸ்து, ஜார்ஜ் பெர்னாண்டஸ்,முத்து, ஆல்பர்ட் ஆகியோர் எழுதி பாடி இசை தட்டாக தயாரித்தனர்.

தேர்தல் விழிப்புணர்வு கருத்துகளை தாங்கிய 5 பாடல்கள் கொண்ட சி.டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.கிரிஷ்ணபிரியா, மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோரின் முன்னிலையில்

மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் லோகநாதனிடம் விழிப்புணர்வு பாடல்களின் சி.டி மாவட்ட ஆட்சியர் அனுமதிக்காக ஒப்படைக்கப்பட்டது, பின்னர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அனுமதியோடு தற்போது பவுடா சமூக வானொலியான எப்.எம்.90.4 ல் ஜேஆர்சி தேர்தல் விழிப்புணர்வு பாடல்கள் ஒளிபரபட்டு வருகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News