தவறான ஆப்ரேஷனால் ஒருவர் உயிரிழப்பு

விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான ஆப்ரேஷன் செய்ததில் ஒருவர் உயிரிழந்தார்.;

Update: 2021-03-31 17:16 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம்,உளுந்தூர்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட பு. மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் மகன் ஆதிமூலம் (32) என்பவருக்கு இடுப்பு வலி என்று கூறி மார்ச் 27ஆம் தேதி விழுப்புரம் இஎஸ் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தார்.

ஆப்பரேஷன் செய்தால் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறியதால் இடுப்பில் ஆபரேஷன் செய்யப்பட்டது. தவறுதலாக ஆப்ரேஷன் செய்யப்பட்டதால் இரத்தம் வடிந்து கொண்டே இருந்தது. அதனை சரி செய்வதற்கு கழுத்தின் தொண்டை, வயிற்றில், இடது காலில் என மூன்று ஆப்பரேஷன் செய்யப்பட்டதால் சிகிச்சை பலனின்றி இன்று இறந்து போனார். தகவலறிந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

உடனடியாக போலீசார் விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர். இரண்டு குழந்தைகள், இளம் மனைவி உள்ள நிலையில் இடுப்பு வலிக்கு தவறான ஆப்ரேஷன் செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags:    

Similar News