கல்குவாரி நடத்த அனுமதி வாங்கித் தருவதாக கூறி மோசடி
மயிலம் அருகே கல்குவாரி நடத்த அனுமதி வாங்கித் தருவதாக கூறி ரூ. 6 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசில் புகார்;
மயிலம் அருகேயுள்ள சிங்கனூரை சேர்ந்த அமுல்ராஜ் என்பவரிடம் எறையூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் கல் குவாரி நடத்த அனுமதி வாங்கித் தருவதாக கூறி 6 லட்சம் வாங்கியுள்ளார், ஆனால், கல்குவாரி நடத்த அனுமதி பெற்று தரவில்லை.
எனவே, சக்திவேல் பணத்தை திருப்பி கேட்டுள்ளார், ஆனால், சக்திவேல் பணத்தை திருப்பி தர மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்,
இது குறித்து அமுல்ராஜ் கொடுத்த புகாரில் பேரில் சக்திவேல் மீது மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.