மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் இசை கச்சேரி நடத்த அனுமதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்;
மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்த சங்கத்தின் தலைவா் யு.செந்தில்குமாா் தலைமையிலான கலைஞா்கள் அளித்த மனுவில், கடந்த ஆண்டு மாா்ச் முதல் இதுவரை ஓராண்டாக, கரோனா பரவல் காரணமாக மேடை மெல்லிசை நிகழ்ச்சிகள் எங்கும் நடைபெறவில்லை. கோயில் திருவிழா, திருமண விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மெல்லிசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், இதை நம்பி வாழும் இசைக் கலைஞா்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞா்கள் 25,000 பேரின் குடும்பத்தினா் வேலைவாய்ப்பு இன்றியும், தங்களது குழந்தைகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்த முடியாமலும் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
அதனால் இசைக் கலைஞா்களின் குடும்ப நலன் கருதி கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் மேடை இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். கரோனா கட்டுப்பாடுகள், சமூக இடைவெளியுடன் இந்த நிகழ்ச்சிகளை நடத்த நிபந்தனை விதித்தால் அதைப் பின்பற்ற தயாராக இருக்கிறோம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.