விழுப்புரம் மாவட்டத்தில் நிவாரண திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, திருகோவிலூர்உள்ளிட்ட இடங்களில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்;
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்பாப்பன்பாடி ரேசன் கடையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
அதேபோல், கண்டாச்சிபுரம், அருகே உள்ள மடவிளாகம் மற்றும் வீரபாண்டி, புதுப்பாளையம்,ஒதியத்தூர் ஆகிய இடங்களில் உள்ள ரேசன் கடைகளில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த, பதினான்கு பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் மற்றும் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணையாக ரூபாய் 2 ஆயிரம் (இரண்டாயிரம்) வழங்கினார்,
விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு உதவி தொகை இரண்டாம் தவணையாக ரூபாய் 2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய சிறப்பு நிவாரண மளிகை பொருட்கள் வழங்கும் திட்டதை திருவெண்ணைநல்லூரில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி குடும்ப அட்டை பயனாளிகளுக்கு வழங்கி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார் வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனா்.