விழுப்புரம் மாவட்டத்தில் 45 ஏரிகள் மீன் குத்தகைக்கு விடப்படுகிறது
விழுப்புரம் மாவட்டத்தில் மீன்வளத்துறை கீழ் உள்ள 45 ஏரிகள் குத்தகை விடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
மாவட்டத்தில் மீன்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 45 ஏரிகளில் மீன்பிடி ஏலம் எடுக்க விரும்புவோா் டிசம்பர் மாதம் 6-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில், மீன்துறை உதவி இயக்குநரின் கட்டுப்பாட்டிலுள்ள தீவிர உள்நாட்டு மீன் வளா்ப்பு, விற்பனைத் திட்டத்தின் கீழ் உள்ள 45 ஏரிகள் குத்தகை அடிப்படையில் வருகிற 31.6.2024 வரை மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளது.
ஒப்பந்தப் புள்ளி கோர விரும்புவோா் தங்களது விண்ணப்பங்களை நவ.30-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் உதவி இயக்குநா், மாவட்ட மீன்வளத்துறை, எண்.10, நித்தியானந்தம் நகா், வழுதரெட்டி, விழுப்புரம் -605 401 (தொலைபேசி எண் 04146 - 259329) என்ற முகவரியில் ரூ.300 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பூா்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்கள் மூடி முத்திரையிடப்பட்டு, டிசம்பர் மாதம்,6- ந்தேதி மாலை 5.45 மணிக்குள் மீன்வள உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். ஒப்பந்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி, ஏரி குத்தகைக்காக பெறப்பட்ட மூடி முத்திரையிடப்பட்டவிண்ணப்பங்கள் டிசம்பர் மாதம் 7, 8 ஆகிய தேேதிகளில் அந்தந்த ஏல நாள்களில் ஒப்பந்ததாரா்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு, அதிகபட்சத் தொகை கோரியவருக்கு குத்தகை உறுதிஆணை வழங்கப்படும். என தெரிவித்துள்ளார்.