விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கில் அடங்க மறுத்தவர்களுக்கு அபராதம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின் போது விதி மீறலில் ஈடுபட்ட 610 பேரிடமிருந்து ரூ.1.53 லட்சம் அபராதமாக வசூலானது

Update: 2022-01-17 11:30 GMT

மாதிரி படம் 

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின் போது, முகக் கவசம் அணியாத 457 பேர், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 26 பேர், சாலைகளில் சுற்றித் திரிந்த 127 வாகன ஓட்டிகள் என விதிமீறலில் ஈடுபட்ட மொத்தம் 610 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.1,53,200 அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News