பாஜக வேட்பாளர் மீது கொலை மிரட்டல் வழக்கு
விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவரும், திருக்கோவிலூர் தொகுதி வேட்பாளர் விஏடி.கலிவரதன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு;
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள சிறுவானுார் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு மனைவி செல்லம்மாள்,30; இவர், திருவெண்ணெய்நல்லுார் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார், அதில் தனது கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில், பாஜக மாவட்ட தலைவர் கலிவரதன் மற்றும் அடையாளம் தெரியாத அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.