விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர் மரணம்
விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் ஒன்றியத்தை சேர்ந்த வீடுர் வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலர் மரடைப்பால் உயிரிழந்தார்.;
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 ம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், வீடூர் அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் தங்கியிருந்த வாக்குச்சாவடி அலுலர் மாணிக்க வாசகம் (55) இன்று அதிகாலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த இவர், விழுப்புரம் இ.எஸ்.கார்டனில் குடியிருந்தார். இவர் வா.பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பொருளாதார பட்டதாரி ஆசிரியர் ஆக பணியாற்றி வந்தார்.
ரத்த அழுத்த மாத்திரை எடுத்து வராததால் நேற்று இரவு இவர் பதற்றமாக இருந்ததாக சக ஆசிரியர்கள் கூறினர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் மயங்கி கிடந்தார்.
இதையடுத்து சக ஆசிரியர்கள் இவரை அவசர சிகிச்சைக்காக பொம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிடாடதாக தெரிவித்தனர். இது குறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.