விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 639 பேருக்கு தொற்று உறுதி; 496 பேர் குணமடைந்தனர்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 639 பேருக்கு தொற்று உறுதியானது. 496 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.;
விழுப்புரம் மாவட்டத்தில் திங்கட்கிழமை 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதவரை 34,498 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இன்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 249 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
திங்கள்கிழமை மட்டும் 496 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 29,196 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள 4998 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.