விழுப்புரம் மாவட்டத்தில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 304 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்

Update: 2021-06-22 15:35 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 103 பேருக்கு கொரோனா  தொற்று உறுதியானது, இதுவரை 41,850 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். இதுவரை 325 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

செவ்வாய்க்கிழமை மட்டும் 304 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 40,532 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 993 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News