விழுப்புரம் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 54,542 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் நேற்று ஒருவரும் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவரும் இறந்தனர்., இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,
இன்று செவ்வாய்க்கிழமை 24 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 54,024 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 152 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.