விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் வேகமெடுக்கிறதா கொரோனா?

விழுப்புரம் மாவட்டத்தில் ஒற்றை இலக்கில் இருந்த தொற்று புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் மாறியுள்ளது

Update: 2022-01-02 03:30 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 20 பேருக்கு கொரோனா  தொற்று உறுதியானது, இதுவரை 46,143 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் நேற்று ஒருவரும் இறப்பு இல்லை, இதுவரை 358 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

நேற்று மட்டும் 6 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 45,730 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 55 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த மாதம்  ஒற்றை இலக்கத்தில் இருந்த தினசரி பாதிப்பு. தற்போது இரட்டை இலக்கத்தில் உள்ளதால், மாவட்ட மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது, 

Tags:    

Similar News