விழுப்புரம் மாவட்டத்தில் 373 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. இன்று 373 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்;

Update: 2021-06-20 16:13 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 126 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 41,632 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 323 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

ஞாயிற்றுக்கிழமை மட்டும் 373 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 39,922 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 1,387 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News