விழுப்புரம் மாவட்டத்தில் குறையும் கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மெதுவாக குறைய தொடங்கி உள்ளது
விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 471 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 37,226 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 276 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்
சனிக்கிழமை மட்டும் 575 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 32,077 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
மீதமுள்ள 4873 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.