விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கொரோனா பலி இல்லை
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நூறுக்கும் கீழே குறைந்தது
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 87 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 42,133 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரை 326 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மட்டும் 198 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 41,162 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
மீதமுள்ள 645 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.