விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்தது கொரானா

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் வரை உச்சம் தொட்ட கொரோனா தற்போது கிடுகிடுவென இறங்கி வருகிறது.

Update: 2021-06-23 15:09 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை 95 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை 41,946 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார்.இதுவரை 326 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

புதன்கிழமை மட்டும் 228 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 40,760 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 860 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News