விழுப்புரத்தில் தொற்று சற்றே குறைந்தாலும் இறப்பு அதிகரிக்கிறது
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது சிறிதளவு இறங்கு முகத்தில் உள்ளபோது இறப்பு ஏறுமுகத்தில் உள்ளது;
விழுப்புரம் மாவட்டத்தில் திங்கட்கிழமை 349 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதவரை 26,452 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இன்று மட்டும் தினசரி இறப்பின் உச்சமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர், இதுவரை169 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். திங்கட்கிழமை மட்டும் 336 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 22,936 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 3347 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Today Positive : 349
Today Discharge : 336
Total Positive : 26452
Total discharge: 22936
Active Case. : 3347
Today Death : 12