தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொடர்பு எண் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கவுள்ள தேர்தல் குறித்த புகார்களை பொதுமக்கள் தேர்தல் பார்வையாளரிடம் அலைபேசியிலும், நேரிலும் தெரிவிக்கலாம்

Update: 2022-02-05 01:20 GMT

விழுப்புரம் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் புகார்களை விழுப்புரம் மாவட்ட நகர்ப்புற தேர்தல் பார்வையாளரிடம் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டருமான த.மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,  விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான விழுப்புரம் மாவட்ட தேர்தல் பார்வையாளராக லஷ்மியை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் புகார்களை 88075 66518 என்ற அலைபேசி எண் வாயிலாக தெரிவிக்கலாம்,

மேலும், பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் புகார்களை தேர்தல் பார்வையாளரிடம் நேரில் தெரிவிக்க, விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அறை எண்: 09-ல் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்

Tags:    

Similar News