விழுப்புரத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டம்
விழுப்புரத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.;
விழுப்புரத்தில் சிபிஎம் பேரவை கூட்டம் நடைபெற்றது.
சிபிஎம் மாநில மாநாடு முடிவுகள் குறித்த விளக்க பேரவை கூட்டம் விழுப்புரம் மாவட்ட சிபிஎம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது, பேரவைக் கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமரன் தலைமை வகித்தார். பேரவையில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன கலந்து கண்டு, சிபிஎம் கட்சியின் மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், எஸ்.வேல்மாறன், எஸ்.கீதா, எஸ்.அறிவழகன் இடை குழு செயலாளர்கள் ஆர்.கண்ணப்பன்,வி.கிருஷ்ணரஜ், கே.குப்புசாமி, கே.சிவகுமார், டி.ராமதாஸ், டி.முருகன், எஸ்.கணபதி,எம்.கலைச்செல்வன் ஏ.சகாதேவன் உட்பட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.