மழை பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து மாவட்ட கலெக்டர் அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

Update: 2021-11-06 15:15 GMT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த. மோகன் 

வடக்கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் விழுப்புரம் மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் 90 சதவீதம் நிரம்பிவிட்டதோடு, பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதனால் உணவு வகைகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்து பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளின் அருகில் தங்கள் குழந்தைகள் செல்லாதவாறு கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும்.என மாவட்ட கலெக்டர் மோகன் அறிவுரை வழங்கி உள்ளார்.

Tags:    

Similar News