விழுப்புரம் மாவட்டத்தில் 7 உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் 7 உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு;

Update: 2021-06-06 16:58 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் 7 உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்
  • whatsapp icon

விழுப்புரம் மாவட்டத்தில் 7 காவல் உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்படி. 

விழுப்புரம் நில அபகரிப்பு பிரிவு உதவி ஆய்வாளர் டி.மருதப்பன் காணை காவல் நிலையத்திற்கும்,

செஞ்சி மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய  டி.ராஜலட்சுமி விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்திற்கும்,

விழுப்புரம் நகரத்தில் பணியாற்றிய  என்.முருகன் வெள்ளிமேடுபேட்டைக்கும்,

கோட்டகுப்பம் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றிய ஆர்.ஆனந்தன் விழுப்புரம் மதுவிலக்கிற்கும்,

வெள்ளிமேடுபேட்டை ஆர்.மணிகண்டன் திருவெண்ணெய்நல்லூருக்கும்,

வெள்ளிமேடுபேட்டை ராஜேஷ் பிரம்மதேசத்திற்கும்,

விழுப்புரம் மேற்கு டி.பழனிச்சாமி கெடார் காவல்நிலையத்திற்கும் இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News