விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 128 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

விழுப்புரம் மாவட்டத்தில் நடக்க உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட இன்று 128 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்

Update: 2022-02-02 13:48 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சி 7 பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள 210 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 28ம் தேதி முதல் மனுத்தாக்கல் தொடங்கி வரும் 4ம் தேதி வரை நடக்கிறது,

இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள்:

நகராட்சிகள்

விழுப்புரம் நகராட்சியில் 25 பேரும்,

திண்டிவனத்தில் 18 பேரும்,

கோட்டகுப்பத்தில் 43 பேரும்,

பேரூராட்சிகள்  

வளவனூர் பேரூராட்சியில் 2 பேரும்,

விக்கிரவாண்டி 19 பேரும்,

செஞ்சி 3 பேரும், மரக்காணத்தில் 3 பேரும்,

திருவெண்ணெய்நல்லூரில் ஒருவரும்,

அரகண்டநல்லூரில் 5 பேரும்,ஆனந்தபுரத்தில் 9 பேரும்,

என 128 பேர் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 5 நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சி,7 பேரூராட்சிகளில் இதுவரை மொத்தம் 197 பேர் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

Tags:    

Similar News