விழுப்புரம் அருகே தடையை மீறி கள் இறக்கும் போராட்டம் நடத்திய 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே நரசிங்கனூரில், கள் இயக்கம் கூட்டமைப்பு சார்பில் தடையை மீறி கள் இறக்கும் போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில், நரசிங்கனூரில் கள்ளிறக்கும் தொழிலாளர்கள் திரண்டிருந்தனர்.
அவர்கள் பனை மரங்களிலிருந்து கள் இறக்குவதற்கு திரண்டு இருந்ததால், செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.தடையை மீறி கள் இறக்க முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்தி நல்லசாமி உள்ளிட்ட 200 பேரை கைது செய்தனர்.