உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கொரோனா மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வேலூரில் இந்திய பல் மருத்துவர்கள் கொரோனா மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.
மார்ச் 8- இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதை தொடர்ந்து வேலூரில் இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் மகளிர் பல் மருத்துவ பேரவை சார்பில் கொரோனா தடுப்பூசி குறித்தும், வாக்காளர் விழிப்புணர்வு குறித்தும் பேரணி நடைபெற்றது.
வேலூர் நகர அரங்கில் இருந்து துவங்கிய பேரணியை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் துவக்கிவைத்தார். அண்ணா சாலை வழியாக வேலூர் தெற்கு காவல் நிலையம் வரை பேரணி நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட பெண் பல் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.