வேலூரில் தேசிய,மாநில நெடுஞ்சாலைகளில் சிக்னல் விளக்குகள் : பணிகள் தொடக்கம்
தேசிய , மாநில நெடுஞ்சாலைகளில் பிளாக் ஸ்பாட்களில் சிக்னல் விளக்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கியது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ரூபாய் 60 லட்சத்தில் பிளாக் ஸ்பாட்களில் சிக்னல் விளக்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதால் சாலை விபத்துகள், குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் தேசிய , மாநில நெடுஞ்சாலைகளில் ரூபாய் 60 லட்சத்தில் பிளாக் ஸ்பாட்களில் சிக்னல் விளக்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது . சாலை விபத்துக்களை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் அதிகளவில் சாலை விபத்துக்கள் அரங்கேறி வருகிறது. இந்திய அளவில் தமிழகத்தில் அதிகளவிலான சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாக தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது சாலை விபத்துக்களை தடுக்க தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் சாலைகளில் விபத்துக்களை தடுக்க சிக்னல் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
அதேபோல் வேலூர் மாவட்டத்தில் , சாலை விபத்துக்களை தடுக்க தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்கள் மாவட்ட காவல்துறை மூலம் கண்டறியப்பட்டது. இதில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சில இடங்களில் மட்டும் சிக்னல் விளக்குகள் ( பிளிங்கர் ) அமைக்கப்பட்டது . தற்போது வேலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் , அடிக்கடி விபத்து நடை பெறும் இடங்களாக கண்டறியப்பட்ட பிளாக் ஸ்பாட்களில் ரூபாய் 60 லட்சத்தில் சிக்னல் விளக்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது . இந்த விளக்குகள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டு விட்டால் , விபத்துக்கள் பெருமளவு குறையும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.