பாதுகாப்பின்றி கண்ணாடித் துகள்களை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கிய வேலூர் எம்.பி

பாதுகாப்பின்றி கண்ணாடித் துகள்களை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த வேலூர் எம்.பி கதிர் ஆனந்த்

Update: 2021-08-20 13:26 GMT

லாரி ஓட்டுனருக்கு அறிவுரை வழங்கிய எம்பி கதிர் ஆனந்த்

வேலூர் எம்பி கதிர் ஆனந்த் இன்று காலை திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்த போது சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே அவருடைய காருக்கு முன்பு பெரிய டாரஸ் லாரி ஒன்று நொருங்கிய கண்ணாடித் துகள்களை பாதுகாப்பு அற்ற முறையில் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்றுள்ளது.

முன்னால் சென்ற லாரியிலிருந்து வித்தியாசமான பொருள் ஏதோ சிதறி ரோட்டிலும் லாரிக்கு பின்புறம் வருபவர்கள் மீது விழுவதை கவனித்த எம்.பி கதிர் ஆனந்த், அந்த லாரியை முந்திச் சென்று மடக்கி டிரைவரிடம் விசாரணை செய்தார்.

அந்த லாரியில் நொறுங்கிப் போன கண்ணாடி துகள்கள் இருபதை கண்ட எம்.பி கதிர் ஆனந்த் "வாகன ஓட்டிகள் பயணிகள் யார் கண்ணிலாவது அல்லது யார் மீதாவது பட்டால் நிச்சயமாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணராமல் பொறுப்பற்ற முறையில் லாரியை வேகமாக ஓட்டிச் செல்கிறிர்களே என லாரி ஓட்டுனரை கடிந்துகொண்டார். மேலும் லாரியை ஓரமாக நிறுத்தி வைத்து காவல்துறை அதிகாரிகளை அழைத்து அந்த லாரியை ஒப்படைத்தார்.

மேலும் அந்த லாரி ஓட்டுநரிடம், கண்ணாடி துகள் யார் கண்ணிலாவது பட்டு அவர்கள் வாழ்க்கையே கேள்விக் குறியாகும் அபாய சூழ்நிலையை உங்களால் உணர முடியவில்லையா? இது தவறில்லையா? மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

Tags:    

Similar News