வேலூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்புமனு தாக்கல்
வேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை.
தமிழக சட்டமன்ற பொது தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற உள்ள நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வேலூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேலூர் மக்கான் பகுதியை சேர்ந்த நாசீர் தனது வேட்பு மனுவை வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் வேலூர் கோட்டாட்சியருமான கணேஷிடம் வழங்கினார்.