சாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைந்த சர்வரின் நேர்மை

கீழே கிடந்த 10 ஆயிரம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டல் சர்வர். அவரை பாராட்டி சன்மானம் வழங்கிய DSP.

Update: 2021-03-16 11:46 GMT

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் ராமு. வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் சர்வராக பணியாற்றி வருகிறார். 

கடந்த 13-ம் தேதி வேலூரில் பிரபலமான மயானகொள்ளை திருவிழா நடைபெற்றது. அப்போது யாரோ ஒரு நபர் வேலூர் சிஎம்சி கண்மருத்துவமனை அருகே 10 ஆயிரம் ரூபாயை தவறவிட்டு சென்றுள்ளார்.அவ்வழியாக சென்ற ஓட்டல் சர்வர் ராமு, கீழே கிடந்த 100 ரூபாய் தாள்கள் கொண்ட 10 ஆயிரம் ரூபாயை வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கலையரசியிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து ஓட்டல் சர்வரின் இந்த நேர்மையை பாராட்டும் விதமாக வேலூர்  துணை கண்காணிப்பாளர்(பொறுப்பு)  மகேஷ், ராமுவை நேரில் அழைத்து பாராட்டி 500 ரூபாய் சன்மானம் வழங்கினார். மேலும் 10 ஆயிரம் ரூபாய் பணம் யாருடையது என இதுவரை தெரியாததால், பணத்தை தவறவிட்டவர்கள் உரிய ஆவணத்தோடு தெற்கு காவல் நிலையம் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News