வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதிகளுக்கு அனுப்பும் பணி.
வேலூரில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு 783 வாக்குசாவடிகளுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவங்கியது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் நேற்று ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவற்றை வேலூர், காட்பாடி, அணைக்கட்டு கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு அனுப்பும் பணி துவங்கியது.
இதில் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 349 வாக்குசாவடிகளுக்கு 419 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள், 450 வீவிபாட் கருவிகளும் வேலூர் தொகுதியில் உள்ள 364 வாக்குசாவடிகளுக்கு , வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவிகள் தலா 437, விவிபாட் 466ம், அணைக்கட்டு தொகுதிக்கு 351 வாக்குசாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் கட்டுப்பாட்டு கருவிகள் தலா 421 விவிபாட் 453ம், கே.வி.குப்பம் தொகுதியில் 311 வாக்குசாவடிகளுக்கு இரண்டு கருவிகளும் தலா 421 விவிபாட் 401 குடியாத்தம் 408 வாக்குசாவடிகளுக்கு இரண்டு கருவிகள் தலா 490 விவிபாட் 506 அனுப்பப்பட்டது
இதில் ஐந்து தொகுதிகளுக்கு 1783 வாக்குசாவடிகளுக்கு மொத்தம் 2140 வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுபாட்டு கருவிகள் 2296 விவிபாட் போன்றவை லாரிகள் மூலம் அந்தந்த தாலுக்கா அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்புடன்அனுப்பி வைக்கப்பட்டது