தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கான பணி நியமன சான்றுகள் வழங்குதல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்.;

Update: 2021-03-13 10:26 GMT

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் தலைமையில் வேலூர், அனைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பணி ஆணையை ஆட்சியர் சண்முகசுந்தரம் வழங்கினார். பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்அதிகாரிகள் கலந்துகொண்டனர். தேர்தல் அமைதியாக நடத்துவது குறித்து  அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

மேலும் மருத்துவ காரணங்களை கூறி தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெற முடியாது அவசர மருத்துவ அறுவை சிகிச்சையில் ஈடுபடும் ஊழியர்கள் மட்டும் தங்கள் மருத்துவ சான்றை உறுதி செய்த பின்னரே விலக்கு அளிக்கபடும் மற்றவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என கூறப்பட்டது.

Tags:    

Similar News