வேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
வேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் SRK அப்பு இன்று வேட்புமனு தாக்கல்;
வேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் SRK அப்பு வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் கணேஷிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக அருகே உள்ள அண்ணா சிலைக்கும், எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்து பிரச்சார வேன் மூலம் அண்ணாசாலை, கண் மருத்துவமனை, தினகரன் நிறுத்தம் வழியாக 1 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று, வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதில் 1000 த்திற்கும் மேற்பட்ட அதிமுக, பாமக, புதியநீதி கட்சி, தமாக, தொண்டர்கள் கலந்துகொண்டனர்.