வேலூர் தொகுதியில் பரப்புரையை தொடங்கிய அதிமுக வேட்பாளர்

வேலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரையை அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே அப்பு இன்று தொடங்கினார்;

Update: 2021-03-13 11:09 GMT

வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்ற பொது தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தை அடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

வேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே அப்பு இன்று வேலூர் அடுத்த பெருமுகை பகுதியில் தனது பரப்புரையை தொடங்கியுள்ளார். அப்பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இவர் காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை எதிர்த்து போட்டியிட்டு கடந்த 2011, 2016 தேர்தலில் தோல்வியடைந்தர்.  தற்போது வேலூர் தொகுதியில் களம் காண்கிறார்.

Tags:    

Similar News