வேலூரில் மின் தடை காரணமாக போக்குவரத்து நெரிசல்

வேலூர் நகரில் இன்று மின் தடை காரணமாக போக்குவரத்து சிக்னல்கள் வேலை செய்யாததால் போக்குவரத்தை சரிசெய்ய போலீசார் சிரமப்பட்டனர்

Update: 2021-07-31 16:10 GMT

வேலூர் அன்னாசாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

வேலூர் நகரில்இன்று மின் தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து சிக்னல்கள் வேலை செய்யாத காரணத்தால் போலீசார் சாலையில் இறங்கி போக்குவரத்தை சரிசெய்தனர்.

மேலும் ஆரணி ரோடு - அண்ணாசாலை சந்திப்பு மற்றும் மக்கான் சிக்னல் பகுதியில் மட்டுமே போலீசார் பணியில் இருந்ததால், மற்ற பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டதுடன், போக்குவரத்தை சரிசெய்ய போலீசார் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

மின்தடை நேரத்திலும் சிக்னல்கள் செயல்பட மின்வசதி ஏற்படுத்தினால் போக்குவரத்தை சரிசெய்ய ஏதுவாக இருக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.

Tags:    

Similar News