வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற பொருட்கள் பறிமுதல்

Tamilnadu Election - cooker seized

Update: 2021-03-04 05:22 GMT

வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட குக்கர், தோசை தாவா, ஜூஸ் மிக்ஸி போன்றவைகளை நிலைய கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டமன்ற பொது தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குதல் போன்றவற்றை தடுப்பதற்காக வேலூர் மவட்டத்தில் சுமார் 30 பறக்கும்படையினர் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வேலூர் கொணவட்டம் பகுதியில் நேற்று தேர்தல் நிலைய கண்காணிப்புக்குழு அலுவலர் ராஜலட்சுமி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பள்ளிகொண்டா நோக்கி சென்ற காரை நிறுத்தி பரிசோதனை செய்ததில், அந்த காரில் 8 குக்கர், 8 தோசை தாவா, 8 ஜூஸ் மிக்சர்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவை பறிமுதல் செய்யப்பட்டு வேலூர் வட்டாட்சியர் ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ .26 ஆயிரம் ஆகும்.

Tags:    

Similar News