வேலூர் காந்தி ரோட்டில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூர் காந்தி ரோட்டில் சாலையை ஆக்கிரமித்த நடைபாதை கடைகளை மாநகராட்சி அலுவலர்கள் இன்று அதிரடியாக அகற்றினர்

Update: 2021-06-25 15:43 GMT

வேலூர் காந்தி ரோட்டில் சாலையை ஆக்கிரமித்த நடைபாதை கடைகளை மாநகராட்சி அலுவலர்கள் இன்று அதிரடியாக அகற்றினர்

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. சாலைகளில் சிமென்ட் தளமும், தார் தளமும் அமைக்கப்பட்டு வருகிறது . அண்ணா சாலை, ஆரணி சாலை, கோட்டை சுற்றுச் சாலை, காந்தி ரோடு, மெயின் பஜார் என பல சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இருபுறமும் மழை நீர் வடிகால் வாய்கால்களில் கைப்பிடிகளுடன் கூடிய நடை பாதைகளும் அமைக்கப்படுகின்றன.

ஆனால் இந்த நடை பாதைகள் அதை ஒட்டி அமைந்த கடைகள், வர்த்தக நிறுவனங்களின் ஷோகேஸ்கள் அமைக்கும் இடமாக முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை தாண்டி சாலையில் நடைபாதை கடைகள் வேறு மக்களை இம்சைக்குள்ளாக்கி வருகிறது. 

இந்நிலையில் எப்போ தும் நெரிசல்மிக்க காந்தி ரோட்டிலும் நடை பாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். அதே போல் நடை பாதையை விட்டு சாலையில் தங்கள் தள்ளு வண்டிகளை நிறுத்தி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்தனர். இக்கடைகளை இன்று மாநகராட்சி அலு வலர்கள் அதிரடியாக அகற்றினர் . மேலும் இனி கடைகளை வைத்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்தனர். அதேபோல் பிளாட்பாரத்தில் தங்கள் கடைகளை விரிவாக்கம் செய்திருந்த கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றியதுடன், அவர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News