ராஜிவ்காந்தி கொலை தண்டனை கைதி நளினிக்கு உடல்நிலை பாதிப்பு
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலையில் தண்டனை கைதி நளினிக்கு, வேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை இன்று நடந்தது
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் கைதான முருகன், அவரது மனைவி நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தனக்கு உடல் நலன் குன்றியதால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார .
அதன்பேரில், இன்று காலை 10 மணியளவில் வேலூர் மகளிர் சிறையில் இருந்த நளினி, பலத்த பாதுகாப்புடன் வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப் பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர் . தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் அவர் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.