பாஜக தலைவர்கள் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது புகார்
பாஜக தலைவர்கள் குறித்து முகநூல் பக்கத்தில் கேவலமாக பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தில் புகார்
வேலூர்மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள காவல்நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹீம் மற்றும் நிர்வாகிகள் காவல்நிலையத்தில் இன்று புகார் அளித்தனர்.
அதில் இன்று முகநூல் பக்கத்தில் பாரத பிரதமரையும் தேசிய செயலாளர் ஜெ.பி நட்டாவையும் மற்றும் தமிழ்மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை இழிவுப்படுத்தியும் மத கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் பாஜகவுக்கு வாக்களிப்பீர் என முகநூலில் பதிவு செய்துள்ளனர். அத்துடன் எனக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பகிரங்கமாக எனவே பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு வெளியிட்ட திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் எனது உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென புகார் மனுவில் கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், உள்ளாட்சி மன்ற தேர்தலில் கட்சியின் பணிகள் குறித்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். அதன் ஒரு பகுதியாக, இன்று வேலூர் பாஜக மாவட்ட அலுவலகத்திற்கு வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
அப்போது என் முகநூல் பக்கத்தில் பாஜக மாநிலத் தலைவரும் தேசிய தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரின் புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் பதிவிட்டுள்ளனர். மேலும் எனக்கு பகிரங்கமாக கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். எனவே முகநூல் பக்கத்தில் பதிவிட்ட நபர்களை உடனடியாக கைது செய்து அவர் மீது தமிழக காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.