வேலூர் மண்டல இணை இயக்குனராக மீண்டும் குபேந்திரன் நியமனம்
நகராட்சிகளின் நிர்வாக மண்டல இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம். வேலூர் மண்டலத்திற்கு குபேந்திரன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்;
தமிழகம் முழுவதும் துறைரீதியான உயர் அலுவலர்கள் பணியிடமாற்றம் நடந்து வருகிறது . அதன்படி , உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு உயர்நிலை அலுவலர்கள் பணியிடமாற்றம் பெற்று வருகின்றனர் . இதில் நகராட்சிகளின் மண்டல இணை இயக்குனர்கள் 15 பேர் நேற்று இரவு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .
வேலூர் மண்டல நகராட்சிகளின் மண்டல இணை இயக்குனராக உள்ளாட்சி அமைப்புகள் ஓம்பட்ஸ்மன் செயலரான பி.குபேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் ஏற்கனவேசில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .