வேலூரில் சாலையேரம் நின்ற லாரி திடீரென தீ பிடித்து எரிந்தது

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் பதிவெண் கொண்ட லாரியில் திடீர் தீ. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். காவல் துறை விசாணை.

Update: 2021-03-21 11:47 GMT

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று இரவு முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் பதிவெண் கொண்ட லோடு லாரி ஒன்று இன்று சுமார் 12 மணி அளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வேலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடனடியாக தீயை அணைத்தனர்.

லாரியில் இருந்த 1 இரு சக்கர வாகனம், 1 மினி ஜெனரேட்டர், சமையல் பாத்திரங்கள், 1 சிறிய அளவிலான மிதி வண்டி, 2 சமையல் எரிவாயு சிலிண்டர் போன்ற வீட்டு உபயோக பொருள்களும் சுமார் 20 தானியம் மூட்டைகளும் தீயில் எரிந்து நாசமாயின. காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் லாரியில் இருந்த பொருட்கள் அதிக வெப்பம் காரணமாக தீ பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் வேலூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட போது லாரி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த பரஸ்ராம் சவுத்ரி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. கூடுதல் விசாரணையில் இவர் சென்னையில் இருந்து ராஜஸ்தானிற்கு சென்று கொண்டிருப்பதும் சென்னையில் அவருக்கு தெரிந்த நபர்களிடம் இருந்து வீட்டு உபயோக பொருள்களை ராஜஸ்தானிற்கு டெலிவெரி செய்வதற்காக எடுத்துச் சென்றார் என்பதும், சம்பவத்தன்று கண்ணமங்கலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார் என்றும் தெரிய வந்தது.

இவ்விபத்து குறித்து காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News